​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"One Nation, One Ration Card" கேரளா உட்பட 12 மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது

Published : Jan 02, 2020 7:36 AM

"One Nation, One Ration Card" கேரளா உட்பட 12 மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது

Jan 02, 2020 7:36 AM

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் புத்தாண்டு முதல் தேதியில் இருந்து 12 மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய  அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல கோடி பேர் இதனால் பயன் அடைவார்கள். இந்த மாநிலங்களில் வாழும் பயனாளிகள் எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். பணி, தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதற்காக முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக ஜூன் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.